Fedora OS அறிமுகம் - 0




Fedora லினக்ஸ் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இது ஒரு இலவச கட்டற்ற இயங்குதளம். இந்த பெடோரா லினக்ஸ் பற்றிய உதவிக்குறிப்புகளாகத்தான் இந்த ”தமிழ் Fedora" அமையவிருக்கிறது. முதலிலேயே லினக்ஸ் பற்றி அதிகமாக எனக்கு ஒன்றும் தெரியாதென இங்கேயே கூறிவிடுகிறேன். வழமையாக உபுண்டு வைத்தான் பயன்படுத்தி வந்தேன். ஆனால் பெடோராவை கற்றிருப்பது கூடுதல் தகைமையாதலால் இப்போது அதனையும் சுயமாக கற்றுக்கொண்டிருக்கிறேன். பல இணையத்தளங்களும் Fedora வினது உத்தியோக பூர்வ இணையத்தளமும் பல உதவிக்குறிப்புகளை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு முதற்கண் நன்றிகள். படிக்கும் தகவல்களை அப்படியே கணினியில் சேமிக்கும் வழக்கமுண்டு. அதனை பதிவிலும் இட்டு உங்களுடனும் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களின் அனுபவத்திலுருந்தும் அறிவிலுமிருந்தும் இன்னும் புதிய வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளலாமென நினைக்கிறேன். ஏனெனில் இங்கு பலர் சுளியோடி முத்துப்பெற்றவர்கள். அவர்களின் ஆதரவு எப்போதுமிருக்குமென நம்புகின்றேன்.

பல நிறுவனங்கள் தங்களின் சர்வர் மேலாண்மைக்கு அதிகம் Cent OS, Suse Linux மற்றும் RedHat Server போன்றவற்றைத்தான் பயன்படுத்துவார்கள். சிலர் Debian OS பயன்படுத்துவார்கள். அவையெல்லாம் ஒவ்வொரு வினக்ஸ் இயங்குதளங்கள்தான். Linux Flavors என குறிப்பிடுவார்கள். இவற்றில் Cent OS மற்றும் RedHat Server ஆகியவை Fedora வினை தங்களின் client / workstation ஆக பணிபுரிய 100% ஆதரவினை வழங்கும். உபுண்டுவிற்கு 98%ம் தான்.
Susi Linux மற்றும் Debian OS போன்றவை உபுண்டுவிற்கு தங்களின் client / workstation ஆக பணிபுரிய 100% ஆதரவினை வழங்கும். Fedora விற்கு 98%ம் தான். காரணம் Fedora ஆனது ஆரம்பகால RedHat இயங்குதள kernel இனை அடிப்படையாக வைத்து அதே கட்டமைப்புக்களுடன் உருவாக்கப்பட்டது. ஆனால் உபுண்டுவோ Debian OS இன் கட்டமைப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. உண்மையில் மேலோட்டமாகப் பார்த்தால் எந்த வேறுபாடுகளும் தெரியாது. ஆனால் மென்பொருள் நிறுவும் பொறிமுறையும் சில commands வித்தியாசமாக பாவிக்கப்படும். ( வேறுபாடுகள் தெரிந்தால் பின்னூட்டத்தில் அறியத்தரவும் )

சரி, இனி பெடோராவைப்பற்றி பார்க்கலாம். Fedora Core 4 விலிருந்து இதனை பயன்படுத்தி வருவதனால் மற்றய லினக்ஸிலிருந்து இது மிகவும் பிடித்தவொன்றாக மாறிவிட்டது. பெடோராவின் முழு வரலாறும் விக்கிப்பீடியாவின் பக்கங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆகவே அதையெல்லாம் விட்டுவிட்டு விடயத்திற்கு வரலாம். தற்போது பெடோராவின் 10ம் பதிப்புதான் சந்தையில் இறுதியாக வெளிவந்திருக்கும் பதிப்பு. அடுத்த மாதம் 11ம் பதிப்வை வெளியிடுகிறார்கள். இப்போது வேண்டுமானால் பீட்டாவினை தரவிறக்கிக்கொள்ளலாம். ஆனால் இங்கு நாம் பார்க்கப்போவது Stable ஆகவிருக்கும் 10ம் பதிப்பைப்பற்றித்தான்.

பெடோரா 10 ஆனது x86 மற்றும் x64 பதிப்புகளாக கிடைக்கிறது. நமது கணினியின் வேகம் அதிகமாகவிருந்தால் x64 பதிப்பினை நிறுவிக்கொள்ளலாம். அதாவது உங்களிடம் 3GB க்கு மேலான அளவு ரேம், AMD x86_64 ரக அல்லது இன்டல் Dual Core/ Core 2 Due மற்றும் இவற்றிற்குப்பிந்திய processor இருக்குமானால் இந்த 64பிட் பதிப்பின் முழு வேகத்தையும் எங்களால் அனுபவிக்க முடியும். வேகம் என்றால் சும்மா இல்லை. மேலே கூறியதைவிட வேகம் குறைந்த எனது மேசைக்கணினியில் 64பிட் பதிப்பு நிறுவ எடுத்த கால அளவு வெறும் 5 நிமிடங்கள்தான். ( 32பிட் உபுண்டுவிற்கு 15 நிமிடம், 32பிட் விஸ்டாவிற்கு அல்டிமேட் 20-30 நிமிடம், 32 பிட் XP_sp2 க்கு 20-25 நிமிடம், 64பிட் XP_sp2 ற்கு 15 நிமிடங்களும் பிடித்தது). அவ்வாறில்லையெனில் 32பிட் பதிப்பான x86 இனையே நிறுவிக்கொள்ளலாம். நீங்கள் போலி இயங்குதள மென்பொருட்களை ( Vertual Box / VM Ware போன்றவற்றில் நிறுவலாம். ஆனால் Vertual PC இனை தவிர்த்தல் நலம்) பாவிப்பதாயின் 32பிட் இயங்குதளத்தையே நிறுவிக்கொள்ளவும்.

அடுத்து நமக்குத்தேவை எம்மாதிரியான வரைகலை இடைமுகப்பினை (Desktop Interface ) என்பதை வைத்து 2 வகையாக பிரிக்கலாம். சாதாரணமாக பிரபலமான Linux Desktop ஆக Gnome விளங்குகிறது. இது பாவிக்க சற்று இலகுவாகவிருப்பினும் பயனர்களிற்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்வது கடினம். அதற்கேற்றாற்போல பயனர்தான் வளையவேண்டும். அடுத்தது KDE எனப்படும் பழைமைவாய்ந்த இடைமுகப்பு. இது ஆரம்ப காலத்தில் லினக்ஸ் முதன்முதலில் GUI ஆக வந்தபோதிலிருந்து பணன்படுத்தப்பட்டும் மேம்படுத்தப்பட்டும் வருகிறது. தற்போது KDE 4.1 ஆனது மிகவும் வலிமைவாய்ந்த இலகுவானதொரு பயனர் இடைமுகப்பாக தெழிற்படுகின்றது. பயனர் தேவைக்கேற்ப வளைந்து கொடுப்பது இதன் சிறப்பம்சமாகும். இதனால் லிகன்ஸிற்கு மென்பொருள் தயாரிப்பவர்களின் முதற்தேர்வாகவும் KDE இருக்கின்றது.

நாம் இங்கு முதலில் 32பிட் Gnome உடைய பெடோராவைப்பற்றி பார்க்கலாம். 64பிட்டிற்கு வரவேற்பு எவ்வாறு கிடைக்குமென தெரியாது. அதனால் 64பிட் பற்றி பின்னர் பார்க்கலாம். ( தட்டச்சு செய்யும் நேரம் மிச்சம் ) மற்றும் சாதாரணமான Genome இலிருந்து படிப்பதும் நல்லது. நல்ல புலமை பெற்றபின்னர் மற்றயதை நாமே சுயமாக கற்றுக்கொள்ளலாம்.

சரி, Fedora 10 x86 நிறுவப்போகின்றோம். இவற்றை எங்கிருந்து எவ்வாறு பெற்றுக்கொள்வதென பார்க்கலாம்.

Fedora x86 Gnome 1CD ISO Direct Download Live CD
Fedora x86 Gnome 1CD ISO Torrent Download Live CD

Fedora x86 KDE 1CD ISO Direct Download Live CD
Fedora x86 KDE 1CD ISO Torrent Download Live CD

Fedora x64 Gnome 1CD ISO Direct Download Live CD
Fedora x64 Gnome 1CD ISO Torrent Download Live CD

Fedora x64 KDE 1CD ISO Direct Download Live CD
Fedora x64 KDE 1CD ISO Torrent Download Live CD

Full Download List

சரி. இனி நிறுவ முன்னர் கணினியின் அடிப்படைத்தேவைகள் என்னவென பார்க்கலாமா ? அதாவது System Requirements. இதை யாராவது இணையத்தில் தேடி பின்னூட்டத்தில் தெரிவித்தால் மகிழ்ச்சி. இல்லாவிடில் அதையும் இடுத்த பதிப்பில் கூறிவிடுகிறேன். சும்மா அடிச்சு தேடிப் பாருங்க.

அடுத்த பதிவு நிறுவுவது எவ்வாறென படங்களுடன் வருகிறேன்.

அன்புடன் சுபாஷ்.

மேலதிக தகவல்களுக்கு:-

Linux Flavors பற்றி கூறியிருந்தேன்.
அனைத்து லிகள்ஸ் பற்றிய ஒப்பீடு
பிரபலமான 10 லினப்ஸ் பற்றிய ஒப்பீடு


-------------------------------------------------------------
டிஸ்கிs-

தமிழ், தொழில்நுட்ப மற்றும் விடயசம்பந்தமான தவறுகளை உடனே அறியத்தாருங்கள். தரமான முறையில் சரியாக எழுதவும் புதிதாக தெரிந்துகொள்ளவும் உதவியாகவிருக்கும். நன்றி.

13 comments:

Tech Shankar April 9, 2009 at 1:26 PM

உங்களுடைய இந்தத் தொடர் வெற்றியடைய மனமார வாழ்த்துகிறேன்.

என்றும் அன்புடன்
த.நெ.

Subash April 9, 2009 at 10:03 PM

வாழ்த்துக்களிற்கு மனமார்ந்த நன்றிகள் பல உங்களிற்கு உரித்தாகட்டும். தொடர்ந்தும் ஆதரவு தாங்க. நன்றிகள்

வடுவூர் குமார் April 10, 2009 at 11:55 PM

பெடோரா 10 இறக்கி வைத்துள்ளேன் ஆனால் நிறுவத்தான் வன்பொருள் இல்லை.
சாதாரண வேலைகலுக்கு உபுண்டு தான் என் தேர்வு.
நானும் பெடொரா 6 ஓ அல்லது 7 வரை உபயோகித்தேன்,ஒயர்லஸ் நிறுவலில் பிரச்சனை வந்ததும் தூக்கிவிட்டு உபுண்டுக்கு மாறிட்டேன்.

Subash April 11, 2009 at 8:17 PM

அந்த வீடியோக்களனைத்தும் அருமை த.நெ. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
RC 7105 அல்லது 7110 (RTC) பதிப்பு வந்ததும் தரவிறக்கி பாவித்துப்பார்க்கலாமென்றிருக்கிறேன்.
முன்னர் விஸ்டாவை கிளித்த அனைத்து வெப்தளங்களும் ஆஹா ஓஹோவென புகழ்ந்து தள்ளுகின்றன. பார்க்கலாம்.

Subash April 11, 2009 at 8:24 PM

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வடுவூர் குமார்.
ஃஃபெடோரா 10 இறக்கி வைத்துள்ளேன் ஆனால் நிறுவத்தான் வன்பொருள் இல்லை.ஃஃ
உபுண்டு இருக்கும் உங்கள் கணினி பெடோராவிற்கு தாராளமாக போதும். வன்தட்டில் இடமில்லையாயின் Virtual Box மூலம் நிறுவிப் பார்க்கலாமே!!! ( நிறுவ வைக்காமல் விடமாட்டோம்ல )
உபுண்டுவிலும் 8ம் பதிப்பிலதானே வயர்லஸ் பாவிப்பது சிக்கலில்லாமல் இருக்கு. இந்த பெடோராவில் எந்த சிக்கலும் இல்லை. லேப்டாப்பில் யர்லெஸ் சிறப்பாக வேலை செய்கிறது. மேசைக்கணினியில் wireless Dongle 54Mbps முலமாக எனது ரவுட்டரை கனக்ட் பண்ணித்தான் பாவிக்கிறேன். driver கூட நிறுவ வேண்டி வரவில்லை.

Tech Shankar April 13, 2009 at 7:15 AM

உங்கள் கமெண்ட் ஏற்புடையதே

Subash April 14, 2009 at 7:49 AM

நன்றி தமிழ்நெஞ்சம்

Tech Shankar April 26, 2009 at 8:59 PM

உங்க டெம்ப்ளேட்டை - படம் போடுவதற்காகவே பெரிய அகலப்பட்டையா மாத்திருக்கீங்க. சூபர் தல

Subash May 8, 2009 at 1:37 AM

ஆஹா
கண்டுபிடிச்சிட்டீங்களா!!!!!!!!
உண்மையாகவே இதுக்காகத்தான் நிறைய டெம்பிளேட் டெஸ“ட் பண்ணி பிறகு இத போட்டேன்.

கிருஷ்ணா (Krishna) October 24, 2009 at 5:07 AM

அருமையா எழுதி இருக்கீங்க. நானும் என்னால் முடிஞ்ச அளவு இப்போ எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

http://rvkrishnakumar.blogspot.com/

மேலே உள்ள சுட்டியில் பாருங்கள்.

பிறகு போலி இயங்கு தளம் என்பதில் எனக்கு உடன் பாடு எல்லை. It may refer as Duplicate Operating system. But your Virtual machine is different from OS.

" மெய் நிகர் கணினி " என்று அழைத்துப் பாருங்கள். நன்றாக இருக்கிறது. அதாவது உண்மை இல்லை, அனாலும் உண்மையான கணினி போல் செயல் படும் என்று பொருள் கொடுக்கிறது.

அன்புடன்,

கிருஷ்ணா

தவறிருந்தால் மன்னிக்கவும்.

Anonymous October 4, 2010 at 6:23 AM

how can i subscribe your post via email?

TAMIL Astrology March 19, 2011 at 1:14 AM

thanks for the site,all the best