சென்ற பதிவில் வேர்ச்சுவல் கணினியில் எவ்வாறு Live பதிப்பை இயக்குவதென பார்த்தோம். இம்முறை எப்படி வன்தட்டில் நிரந்தரமாக நிறுவுவதென பார்க்கலாம். நீங்கள் வேர்ச்சுவல் கணினியில் நிறுவுவதாயின் வன்தட்டினை தகவமைப்பதைப்பற்றி கவலையே படத்தேவையில்லை. ஆனால் உண்மையான கணினியில் நிறுவுவதாயின் உங்களுடைய மற்றய வன்தட்டு பிரிவினைகளை பாதிக்காதவாறு நிறுவவேண்டும். நாம் முதலில் வேர்ச்சுவல் கணினியிலேயே நிறுவிப்பார்க்கலாம். நீங்களாகவே சிலசமயம் முயன்றிருப்பீர்கள். ஆனாலும் விளக்கமாக இந்தப்பதிவில் பார்க்கலாம்.
வேர்ச்சுவல் கணினியில் Install to Harddisk எனும் ஐகானை இரட்டைச்சொடுக்குவதன் மூலம் நிறுவும் பணியினை ஆரம்பிக்கலாம்.
2. ஆரம்பத்தில் வரும் வரவேற்பு செய்திகளை தாங்கிய சாளரங்களை Next இனை சொடுக்கி கடந்து வந்தீர்களானால் மொழியினை தேர்வு செய்யும் பகுதி வரும். இங்கு விரும்பிய இயக்குதள மொழியினை தேர்வு செய்யலாம். தமிழ் கூட இருக்கிறது. ஆனால் கொஞ்சம் கடுந்தமிழ்.
3. அடுத்து Keyboard layout. இங்கு எதுவும் செய்யவேண்டியதில்லை. அப்படியே இடுத்த பக்கத்திற்கு செல்லவும்.
4. இங்கு Host Name எனும் இடத்தில் உங்ககுடைய பெடோரா கணினியின் பெயரை தரவேண்டும். இன்னும் பெயர் சூட்டவில்லையெனில் Fedora-Home, My-Fedora-pc என விதவிதமாக விரும்பியவாறு பெயர் சூட்டலாம். நெட்வேர்க்கில் இணையும்போது உங்கள் கணினியை அடையாளம்பாண இந்தப்பெயர் உதவும்.
5. அடுத்து உங்கள் வசிப்பிடம் பற்றிய தகவல். இது தன்னிச்சையாக உங்கள் உள்ளூர் வழக்கங்களை கணினியில் ஏற்றிவிடும். அதாவது பண அலகு ( US$, Rs, C$ ), நேரம் போன்றவை.
6. அடுத்து System Administrator அகவுள்ள முதன்மைநிலை பயனர்கணக்கிற்குரிய கடவுச்சொல்லை அமைக்கவேண்டும். அதாவது Root Pasword. இதனை அப்படியே எங்காவது எழுதிவைத்துவிடுங்கள்.
அல்லது ஏற்கனவே வேறு இயக்கதளங்கள் நிறுவப்பட்ட கணினியின் மீதமாகவுள்ள பிரிவினையில் ( Partition ) நிறுவும் எண்ணமிருப்பின் "Use free space on the selected drives and create default layout" எனும் தெரிவிளை தேர்ந்தெடுக்கவும். எப்படியாயினும் x86 வகை பெடோராவினை நிறுவ 10GB யும் x64 பதிப்பினை நிறுவ 20BG இடமும் தேவை.
Next இனை சொடுக்க அடுத்து Root Password இனை கேட்கும். சரியான கடவச்சொல்லை தந்துவிட்டீர்களெனில் நீங்கள் வன்தட்டு பிரிவினை பகுதிக்குச்செல்லலாம்.
இங்கு 3 வகையான பிரிவினைகளை ஏற்படுத்தவேண்டும்.
- Root Partition எனப்படும் சிஸ்டம் சார்ந்த கோப்புகளை நிறுவும் இடம். இது குறைந்தது 3-4GB அளிவிருத்தல் நலம். அதாவது விண்டோஸ் இயக்கதள C Drive போன்றது.
- Swap Partition எனும் தற்காலிக சேமிப்பிற்கான இடம். இது உங்கள் RAM இன் 3/2 பகுதியளவு. அதாவது ஒன்ரரைமடங்கு. உதாரணமாக நீங்கள் வேர்சுவல் கணினியின் ரேம் அளவு 1GB என தந்திருந்தீர்களெனில் Swap அளவு 1.5GB யாகவோ அதற்கு மேலாகவோவிருத்தல் வேண்டும். விண்டோஸ் இயக்கதளத்தில் Virtual Memory என வருவது.
- Home Partition எனும் பயனர் கோப்பினை சேமிக்கும் இடம். இது குறைந்தது 4GB யாவது இருத்தல் நலம்.
8. நீங்கள் "Use free space on the selected drives and create default layout" என்பதனை தெரிவுசெய்திருப்பின் கீழேயுள்ளவாறு திரை இருக்கும்.
இங்கு Free space என்பதுதான் வெறுமையாகவுள்ள நமது வன்தட்டு. இதனைத்தான் நாம் பிரிவினைக்குட்படுத்தப்போகிறோம். New எனும் பட்டனை சொடுக்கவும். வரும் திரை கீழேயுள்ளவாறு இருக்கும்.
- Mount Point என்பதில் “ / “ என்பதை தேர்துந்தெடுக்கவும். இதுதான் Root எனும் சிஸ்டம் பகுதிக்கான பகுதி.
- File System Type என்பதில் ext-3 என்பதனை தெரிவுசெய்யவும். விண்டோசில் FAT32, NTFS போன்று லினக்ஸ் இந்த வரைமுறையைத்தான் பயன்படுத்துகிறது.
- அடுத்து Size இனில் 3 அல்லது 4GB யினை தந்துவிடுங்கள்
- Fixed Size என்பதனையும் தேர்வில் இருக்குமாறு OK யினை சொடுக்கினால் நீங்கள் Root Partition இனை உருவாக்கி முடித்துவிட்டீர்கள்.
பின்னர் மீண்டும் Free Space என்பதனை தேர்வுசெய்து மீண்டும் New பட்டனை சொடுக்கவும். இம்முறை Swap பிரிவினையை உருவாக்கப்போகிறோம். படத்தில் காட்டியுள்ளவாறு செயற்படவும். Mount Point என்பதில் எதனையும் தெரிவுசெய்ய வேண்டாம். நேரடியாக File System type என்பதில் Swap என்பதனை தெரிவுசெய்யுங்கள். Size என்பது உங்கள் வேர்சுவல் கணினியின் RAM ன் 3/2 பகுதியாகவிருக்கவேண்டும்.
அடுத்து Home Partition. மீண்டும் Free Space என்பதனை தேர்வுசெய்து New பட்டனை சொடுக்கவும். இப்போது Mount Point ல் /HOME என்பதனை தெரிவு செய்யவும். அடுத்து ext-3 system type. Fill to maximum என்பதனை தெரிவு செய்தால் மீதமாகவுள்ள அனைத்து இடங்களையும் இது தனதாக்கிவிடும். நாம் கணித்தல் வேலைகளை செய்ய தேவையில்லை. அல்லது Fill all space upto என்பதை தெரிவுசெய்து அந்த சாரளத்தை சற்சு நகர்த்தி பின்னாலுள்ள சாளரத்தில் Free Space எவ்வௌவென பார்த்து நீங்களாகவே தட்டச்சு செய்யலாம்.
சிலவேளைகளில் இங்கு ஒரு சிக்கல் வரலாம். உங்கள் வேர்சுவல் கணினியில் இடம் போதவில்லையெனில் இந்த பிரிவினையை உருவாக்க முடியாதென பழைச்செய்தி வரலாம். வந்தால், “/” எனும் Root partition இனை தெரிவுசெய்து Edit பட்டனை அழுத்தி அடன் Size இனை குறைத்துவிடவும். பின்னர் /HOME னை உருவாக்குங்கள். இதன்பின்னர் மீண்டும் “/” இன் அளவை பழையபடி 3GB/4GB ஆக்கிவிடுங்கள்.
இந்த செயற்பாட்டினை வன்தட்டில் நிரந்தரமாக பதிக்கவாவென கேட்கும். அதனை ஆமோதித்துவிட்டால் அத்துடன் நமது பிரிவினையுண்டாக்கும் படலம் முடிந்தது.
9. அடுத்து என்னென்ன மென்பொருட்களை நிறுவவேண்டுமென கேட்கும். இப்போதைக்கு Next இனை மட்டும் தெரிவுசெய்யுங்கள். இதனை பின்னர் விரிவாக பார்க்கலாம்.
10. அடுத்து Boot செயன்முறையை தகவமைக்க வேண்டும். நம்மிடம் பெடோரா மட்டுமேயுள்ளதெனில் படத்திலுள்ளவாறு இருக்கும். Next இனை தெரிவுசெய்துவிட்டால் மட்டும் போதுமானது. அல்லாவிடில் மற்றய இயக்கதளமும் இருக்கும். எது default ஆகவிருக்கவேண்டுமென தெரிவுசெய்துவிட்டால் சரி.
11. நிறுவுதல் செயல்பாடு முடிந்தபின்னர் கணினியை restart பண்ணவேண்டுமென செய்திவரும். Restart பண்ண பெடோரா boot ஆகும்.
கடவுச்சொல்லை தந்தபின்னர் பெடோரா வரவேற்புத்தளத்தில் நீங்கள் இருப்பீர்கள்.
12. அடுத்து நீங்கள் உங்களுக்கான பயனர் கணக்கொன்றை உருவாக்கவுண்டும். இதன் கடவுச்சொல் Root பயனரின் கடவுச்சொல்லாகவிருக்காமலிருத்தல் நலம்.
13. அடுத்து வருபவைகளை Next இன் மூலம் அனுப்பிவிட்டால் புகுபதிகை சாளரத்திந்கு வருவீர்கள். ( Login Screen )
14. நீங்கள் சற்றுமுன்னர் தந்த பயனர் கணக்கின் மூலம் புகுபதிகை செய்தால் உங்கள் பெடோராவின் வரைகலைப்பணித்தளத்தில் ஜாம்ஜாமென இருப்பீர்கள்.
பெடோரா மட்டுமல்ல 90% மான லினக்ஸ் இன் நிறுவும் செயற்பாடு இப்படியேதான் இருக்கும். வேறுபாடுகள் இருக்காது.