நிரந்தரமாக பெடோரா வினை வன்தட்டில் நிறுவுதல் -1

சென்ற பதிவில் வேர்ச்சுவல் கணினியில் எவ்வாறு Live பதிப்பை இயக்குவதென பார்த்தோம். இம்முறை எப்படி வன்தட்டில் நிரந்தரமாக நிறுவுவதென பார்க்கலாம். நீங்கள் வேர்ச்சுவல் கணினியில் நிறுவுவதாயின் வன்தட்டினை தகவமைப்பதைப்பற்றி கவலையே படத்தேவையில்லை. ஆனால் உண்மையான கணினியில் நிறுவுவதாயின் உங்களுடைய மற்றய வன்தட்டு பிரிவினைகளை பாதிக்காதவாறு நிறுவவேண்டும். நாம் முதலில் வேர்ச்சுவல் கணினியிலேயே நிறுவிப்பார்க்கலாம். நீங்களாகவே சிலசமயம் முயன்றிருப்பீர்கள். ஆனாலும் விளக்கமாக இந்தப்பதிவில் பார்க்கலாம்.

வேர்ச்சுவல் கணினியில் Install to Harddisk எனும் ஐகானை இரட்டைச்சொடுக்குவதன் மூலம் நிறுவும் பணியினை ஆரம்பிக்கலாம்.


2. ஆரம்பத்தில் வரும் வரவேற்பு செய்திகளை தாங்கிய சாளரங்களை Next இனை சொடுக்கி கடந்து வந்தீர்களானால் மொழியினை தேர்வு செய்யும் பகுதி வரும். இங்கு விரும்பிய இயக்குதள மொழியினை தேர்வு செய்யலாம். தமிழ் கூட இருக்கிறது. ஆனால் கொஞ்சம் கடுந்தமிழ்.

3. அடுத்து Keyboard layout. இங்கு எதுவும் செய்யவேண்டியதில்லை. அப்படியே இடுத்த பக்கத்திற்கு செல்லவும்.

4. இங்கு Host Name எனும் இடத்தில் உங்ககுடைய பெடோரா கணினியின் பெயரை தரவேண்டும். இன்னும் பெயர் சூட்டவில்லையெனில் Fedora-Home, My-Fedora-pc என விதவிதமாக விரும்பியவாறு பெயர் சூட்டலாம். நெட்வேர்க்கில் இணையும்போது உங்கள் கணினியை அடையாளம்பாண இந்தப்பெயர் உதவும்.

5. அடுத்து உங்கள் வசிப்பிடம் பற்றிய தகவல். இது தன்னிச்சையாக உங்கள் உள்ளூர் வழக்கங்களை கணினியில் ஏற்றிவிடும். அதாவது பண அலகு ( US$, Rs, C$ ), நேரம் போன்றவை.

6. அடுத்து System Administrator அகவுள்ள முதன்மைநிலை பயனர்கணக்கிற்குரிய கடவுச்சொல்லை அமைக்கவேண்டும். அதாவது Root Pasword. இதனை அப்படியே எங்காவது எழுதிவைத்துவிடுங்கள்.

7. இப்போது நாம் மிக முக்கியமான வன்தட்டு பிரிவினை பக்கத்திற்கு வந்திருப்போம். நீங்கள் வேர்ச்சுவல் கணினியில் நிறுவப்போகிறீர்களெனில் "Remove all partitions on selected drives and create default layout" எனும் தெரிவினை பயன்படுத்தலாம்.



அல்லது ஏற்கனவே வேறு இயக்கதளங்கள் நிறுவப்பட்ட கணினியின் மீதமாகவுள்ள பிரிவினையில் ( Partition ) நிறுவும் எண்ணமிருப்பின் "Use free space on the selected drives and create default layout" எனும் தெரிவிளை தேர்ந்தெடுக்கவும். எப்படியாயினும் x86 வகை பெடோராவினை நிறுவ 10GB யும் x64 பதிப்பினை நிறுவ 20BG இடமும் தேவை.

Next இனை சொடுக்க அடுத்து Root Password இனை கேட்கும். சரியான கடவச்சொல்லை தந்துவிட்டீர்களெனில் நீங்கள் வன்தட்டு பிரிவினை பகுதிக்குச்செல்லலாம்.

இங்கு 3 வகையான பிரிவினைகளை ஏற்படுத்தவேண்டும்.
- Root Partition எனப்படும் சிஸ்டம் சார்ந்த கோப்புகளை நிறுவும் இடம். இது குறைந்தது 3-4GB அளிவிருத்தல் நலம். அதாவது விண்டோஸ் இயக்கதள C Drive போன்றது.
- Swap Partition எனும் தற்காலிக சேமிப்பிற்கான இடம். இது உங்கள் RAM இன் 3/2 பகுதியளவு. அதாவது ஒன்ரரைமடங்கு. உதாரணமாக நீங்கள் வேர்சுவல் கணினியின் ரேம் அளவு 1GB என தந்திருந்தீர்களெனில் Swap அளவு 1.5GB யாகவோ அதற்கு மேலாகவோவிருத்தல் வேண்டும். விண்டோஸ் இயக்கதளத்தில் Virtual Memory என வருவது.
- Home Partition எனும் பயனர் கோப்பினை சேமிக்கும் இடம். இது குறைந்தது 4GB யாவது இருத்தல் நலம்.

8. நீங்கள் "Use free space on the selected drives and create default layout" என்பதனை தெரிவுசெய்திருப்பின் கீழேயுள்ளவாறு திரை இருக்கும்.



இங்கு Free space என்பதுதான் வெறுமையாகவுள்ள நமது வன்தட்டு. இதனைத்தான் நாம் பிரிவினைக்குட்படுத்தப்போகிறோம். New எனும் பட்டனை சொடுக்கவும். வரும் திரை கீழேயுள்ளவாறு இருக்கும்.

- Mount Point என்பதில் “ / “ என்பதை தேர்துந்தெடுக்கவும். இதுதான் Root எனும் சிஸ்டம் பகுதிக்கான பகுதி.

- File System Type என்பதில் ext-3 என்பதனை தெரிவுசெய்யவும். விண்டோசில் FAT32, NTFS போன்று லினக்ஸ் இந்த வரைமுறையைத்தான் பயன்படுத்துகிறது.

- அடுத்து Size இனில் 3 அல்லது 4GB யினை தந்துவிடுங்கள்

- Fixed Size என்பதனையும் தேர்வில் இருக்குமாறு OK யினை சொடுக்கினால் நீங்கள் Root Partition இனை உருவாக்கி முடித்துவிட்டீர்கள்.

பின்னர் மீண்டும் Free Space என்பதனை தேர்வுசெய்து மீண்டும் New பட்டனை சொடுக்கவும். இம்முறை Swap பிரிவினையை உருவாக்கப்போகிறோம். படத்தில் காட்டியுள்ளவாறு செயற்படவும். Mount Point என்பதில் எதனையும் தெரிவுசெய்ய வேண்டாம். நேரடியாக File System type என்பதில் Swap என்பதனை தெரிவுசெய்யுங்கள். Size என்பது உங்கள் வேர்சுவல் கணினியின் RAM ன் 3/2 பகுதியாகவிருக்கவேண்டும்.

அடுத்து Home Partition. மீண்டும் Free Space என்பதனை தேர்வுசெய்து New பட்டனை சொடுக்கவும். இப்போது Mount Point ல் /HOME என்பதனை தெரிவு செய்யவும். அடுத்து ext-3 system type. Fill to maximum என்பதனை தெரிவு செய்தால் மீதமாகவுள்ள அனைத்து இடங்களையும் இது தனதாக்கிவிடும். நாம் கணித்தல் வேலைகளை செய்ய தேவையில்லை. அல்லது Fill all space upto என்பதை தெரிவுசெய்து அந்த சாரளத்தை சற்சு நகர்த்தி பின்னாலுள்ள சாளரத்தில் Free Space எவ்வௌவென பார்த்து நீங்களாகவே தட்டச்சு செய்யலாம்.

சிலவேளைகளில் இங்கு ஒரு சிக்கல் வரலாம். உங்கள் வேர்சுவல் கணினியில் இடம் போதவில்லையெனில் இந்த பிரிவினையை உருவாக்க முடியாதென பழைச்செய்தி வரலாம். வந்தால், “/” எனும் Root partition இனை தெரிவுசெய்து Edit பட்டனை அழுத்தி அடன் Size இனை குறைத்துவிடவும். பின்னர் /HOME னை உருவாக்குங்கள். இதன்பின்னர் மீண்டும் “/” இன் அளவை பழையபடி 3GB/4GB ஆக்கிவிடுங்கள்.

இந்த செயற்பாட்டினை வன்தட்டில் நிரந்தரமாக பதிக்கவாவென கேட்கும். அதனை ஆமோதித்துவிட்டால் அத்துடன் நமது பிரிவினையுண்டாக்கும் படலம் முடிந்தது.



9. அடுத்து என்னென்ன மென்பொருட்களை நிறுவவேண்டுமென கேட்கும். இப்போதைக்கு Next இனை மட்டும் தெரிவுசெய்யுங்கள். இதனை பின்னர் விரிவாக பார்க்கலாம்.

10. அடுத்து Boot செயன்முறையை தகவமைக்க வேண்டும். நம்மிடம் பெடோரா மட்டுமேயுள்ளதெனில் படத்திலுள்ளவாறு இருக்கும். Next இனை தெரிவுசெய்துவிட்டால் மட்டும் போதுமானது. அல்லாவிடில் மற்றய இயக்கதளமும் இருக்கும். எது default ஆகவிருக்கவேண்டுமென தெரிவுசெய்துவிட்டால் சரி.



11. நிறுவுதல் செயல்பாடு முடிந்தபின்னர் கணினியை restart பண்ணவேண்டுமென செய்திவரும். Restart பண்ண பெடோரா boot ஆகும்.




கடவுச்சொல்லை தந்தபின்னர் பெடோரா வரவேற்புத்தளத்தில் நீங்கள் இருப்பீர்கள்.


12. அடுத்து நீங்கள் உங்களுக்கான பயனர் கணக்கொன்றை உருவாக்கவுண்டும். இதன் கடவுச்சொல் Root பயனரின் கடவுச்சொல்லாகவிருக்காமலிருத்தல் நலம்.


13. அடுத்து வருபவைகளை Next இன் மூலம் அனுப்பிவிட்டால் புகுபதிகை சாளரத்திந்கு வருவீர்கள். ( Login Screen )


14. நீங்கள் சற்றுமுன்னர் தந்த பயனர் கணக்கின் மூலம் புகுபதிகை செய்தால் உங்கள் பெடோராவின் வரைகலைப்பணித்தளத்தில் ஜாம்ஜாமென இருப்பீர்கள்.




பெடோரா மட்டுமல்ல 90% மான லினக்ஸ் இன் நிறுவும் செயற்பாடு இப்படியேதான் இருக்கும். வேறுபாடுகள் இருக்காது.

21 comments:

Subash April 25, 2009 at 12:50 PM

test 3

Suresh April 25, 2009 at 4:47 PM

அருமையான பகிர்தல் நண்பா :-)

வடுவூர் குமார் April 25, 2009 at 6:58 PM

அருமை.நான் பெரும்பாலும் "/ மற்றும் Swap " மட்டுமே உருவாக்குவேன் மீதியை அதுவே பார்த்துக்கொள்ளும்.

Anonymous April 25, 2009 at 10:14 PM

ஃபெடோராவில் கலக்குகிறீர்கள்.
ரொம்ப நேரம் செலவு செய்வது தெரிகிறது.

Subash April 25, 2009 at 10:23 PM

Thanks Suresh
Thanks Vaduvoor Kumar
Thanks shirdi.saidasan@gmail.com

//வடுவூர் குமார் said...

அருமை.நான் பெரும்பாலும் "/ மற்றும் Swap " மட்டுமே உருவாக்குவேன் மீதியை அதுவே பார்த்துக்கொள்ளும்.//

இது எனக்கு தெரியாதே!!!
இப்படியாயின் இடம் போதாதென வரும் பிழைச்செய்தியை பற்றி கவலைப்படவேண்டியதில்லையே.
பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிகள் வடுவூர் குமார்

ஃஃshirdi.saidasan@gmail.com said...

ஃபெடோராவில் கலக்குகிறீர்கள்.
ரொம்ப நேரம் செலவு செய்வது தெரிகிறது.ஃஃ

30நிமிடங்கள்தான். நேரம் கிடைக்கும்பொது தட்டச்சு செய்து சேமித்துவிடுவேன். ஆனால் பிளாகரில் ஏற்றும்போதுதான் வெறுக்கிறது. விரைவில் வேர்ட் பிரசிற்கு மாறிவிட்டால் நேரமும் மிச்சமாகும்.

பாலா April 26, 2009 at 12:39 PM

என்னங்க தல இது..??! ஆல்-இன்-ஆல் அழகு ராஜா கணக்கா.. பின்னுறீங்க..! :)

நானும் ஃபெடரோவை PS3-யில் இன்ஸ்டால் பண்ணியிருக்கேன். ஆனா.. உபுண்டு மாதிரி.. இந்த ஃப்ளேவர் எனக்கு பிடிக்கலை! :(

ப்ளாகர்->வேர்ட்ப்ரெஸ் - நான் கூட அதுதான் நினைக்கிறேன்.

அது இல்லாம... எனக்கு தனியா powerbala.com-இருக்கு. $70 கொடுத்து வெட்டியா..! :) :)

Esywara April 26, 2009 at 10:41 PM

amazing..tips and tutorials..
thank you

Subash April 27, 2009 at 3:43 AM

வாங்க ஹாலிவூட் பாலாண்ணா
பெடொரா அதிகமாக மொழுதுபோக்கு வேலைக்கு ஈடுகடுக்காது. அதற்கு உபுண்டுவே நல்லது.

ஆஹா!!! வேர்ட்பிரசிற்கு ஆதரவு நல்லா கிடைக்கும்போலிருக்கே. உங்க தளத்திலேயே fantastico மூலம் நிறுவிடலாமே!!!

விரைவில் வேர்ட்பிரசியனாக மாற வாழ்த்துக்கள் தல

Subash April 27, 2009 at 3:44 AM

@Esywara : Thanks for ur visit and u r welcome
:)

Subash April 27, 2009 at 3:55 AM

//நானும் ஃபெடரோவை PS3-யில் இன்ஸ்டால் பண்ணியிருக்கேன். ஆனா.. உபுண்டு மாதிரி.. இந்த ஃப்ளேவர் எனக்கு பிடிக்கலை! :(//

Resolution பிரச்சனையோ ????

http://en.wikipedia.org/wiki/Yellow_Dog_Linux

http://us.fixstars.com/products/ydl/home.shtml

Yellow_Dog_Linux என PS3 க்காகவே ஒரு லினக்ஸ் வருது. DVD க்கு காசு கேப்பாங்க. குடுத்துராதீங்க. தரவிறக்கலாம். GNU GPL License தான்

பயன்படுத்தினா மறக்காம எப்படி இருக்குனு சொல்லுங்க

பாலா April 30, 2009 at 1:53 PM

Fedora போட்டு.. பிடிக்காம.. Yellow Dog- போட்டு, திரும்ப Fedora மாத்தி... திரும்ப yellow........!!!

ஆனா எனக்கு ரெண்டும் பிடிக்கலை. இந்த ரெண்டும் MKV ஃபைலை ஹேண்டில் பண்ண ரொம்ப கஷ்டப்படுதுங்க.

அப்புறம் இன்னொரு பிரச்சனை.., VLC Player இந்த ரெண்டு தளத்திலும் (PS3) சரியா வொர்க் ஆக மாட்டேங்குது (Full Screen mode-ல்).

ஆனா.. உபுண்டு பதிப்பு இப்பல்லாம் PS3-க்கு வர்றது இல்லைன்னு நினைக்கிறேன். அதனால வேற வழியில்லாமதான் இதை யூஸ் பண்ண வேண்டியிருக்கு.

மத்தபடி.. resolution பிரச்சனையெல்லாம் இல்லை சுபாஷ்.

Subash May 1, 2009 at 10:11 AM

பாலாண்ணா,
எல்லா Linux ம் .mkv fileஐ நிர்வகிக்க கஷ்டப்படுகின்றன. இவற்றிற்கு மிக மிக மிக அதிகமாக CPU power தேவையாம். காரணம் லினக்சில் இந்த வகை கோப்புக்கள் ரெண்டர் பண்ணப்படும் விதம் வித்தியாசமாம்.

ஆனால் விண்டோசில் இச்த வகை கோப்பினை கையாளும் முறை மிக எளிதாம். இதுதான் சிக்கலுக்குக் காரணமாம். ( நண்பர்களின் தகவல் )

இதற்கென வேறு வகையில் mkv files இனை கையாளும் விதமாக மென்பொருள் அப்டேட் வந்தால்தான் விமோசனம் என நினைக்கிறேன்.

விரையில் அவ்வாறே நடக்கட்டும்.

பாலா May 2, 2009 at 3:06 AM

அப்படியா..?!!!

எனக்கு.. இப்ப MKV ஃபைல்களை M2TS-ஆக கன்வர்ட் செய்வதால் PS3-யில் பார்ப்பதில் பிரச்சனையில்லை.

PS3 படிக்க முடியாத XivD ஃபைல்களை கன்வர்ட் செய்ய சோம்பேறித்தனமா இருந்தா மட்டுமே.. நான் PS3-லினக்ஸ் யூஸ் பண்ணுறேன்.

அதனால்..இப்போதைக்கு.. இது எப்படி வொர்க் ஆனாலும் பிரச்சனையில்லை! :)

எதிர்காலத்தில்.. பார்ப்போம்..!!

டெஸ்க்டாப்பில்.. இன்ஸ்டால் பண்ண... எந்த ஃப்ளேவர் நல்லாயிருக்கும் சுபாஷ்?

லினக்ஸ் பத்தி.. எனக்கு எதுவும் தெரியாது. 2-3 முறை உபுண்டு இன்ஸ்டால் பண்ணி... யூஸ் பண்ணாம.. அப்படியே ஃபார்மேட் பண்ணிட்டேன்.

உங்க பரிந்துரை?

Subash May 2, 2009 at 9:36 AM

பரிந்துரை சொல்றதுக்கெல்லாம் அறிவு போதாதுண்ணா.

multimediaக்கு எனில் Mandriva Linux use பண்ணலாம்.

சாதாரண வேலைகளுக்கு மட்டுமெனில் உபுண்டு.

ஹைடெக் மென்பொருட்களை பயன்படுத்துவதாயின் ஓபின் சூசி அல்லது பெடோரா.

பாலா May 2, 2009 at 3:58 PM

அப்ப உபுண்டு-வே உபயோகிக்க முயற்சிக்கிறேன். 9.04 டவுன்லோட் பண்ணியிருக்கேன்.

ஒரே.. பிரச்சனை.. இன்ஸ்டால் பண்ணின பின்னாடி.. அதை வச்சிகிட்டு என்ன பண்ணுறதுன்னு தெரியலை.

ப்ரொக்ராமும் .NET-ல் செய்வதால்... firefox தவிர வேற எதையும் ஓப்பன் பண்ண தேவையில்லாம இருக்கு.

Subash May 3, 2009 at 7:31 PM

வாழ்த்துக்கள் பாலாண்ணா.
நிறுவீனிங்கன்னா வேற நிறைய பண்ணிப்பார்க்க தானாகவே ஐடியா வரும். :)

www.bogy.in April 13, 2010 at 9:02 PM

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Anonymous November 1, 2010 at 3:17 AM

நண்பரே,எனக்கு இரு சந்தேகங்கள்.
1.நோக்கியா வெளியிட்டுள்ள nokia c3 என்ற மாடலில் wifi உள்ளது.எனவே gprs மூலமாக இணைத்து gtalk,fring,skype....போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தி onlineல் voice chat செய்யமுடியுமா?

2.NET BOOKஎன்றால் என்ன?அதன் பயன்பாடு என்ன?அதை வாங்கும்போது கவனிக்கவேண்டிய அம்சங்கள் என்ன?சென்னையில் எவ்வளவு விலை முதல் கிடைக்கும்?
மேற்கண்ட ஐயங்களுக்கு விளக்கம் தரமுடியுமா?

சரவணன்.D November 15, 2010 at 10:32 AM

நன்றி தோழா!!!
உங்ளின் கடின உழைப்பு இந்த பதிவை பார்க்கும்போது தெளிவாகத்தெரிகிறது வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுவோம் லினக்ஸ்-ஐ பரப்புவோம்.

http://gnometamil.blogspot.com/

லினக்ஸ் பற்றிய வலைபூ தமிழில்...

சரவணன்.D November 15, 2010 at 10:33 AM

வழ்த்துக்கள் தோழா!!!