Fedora 10 நிறுவ போலி இயக்கதளத்தை வடிவமைத்தல் -01

இன்று நாம் Vertual Box எனும் போலி இயக்குதள மென்பொருளில் Fedora வை நிறுவிப்பார்க்கப் போகிறோம். போலி இயக்குதள மென்பொருளானது உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள இயக்குதளத்தில் இயங்கும் ஒரு சாதாரண மென்பொருள். இந்த மென்பொருளின் உள்ளே உண்மையான கணினியில் உள்ளவாறு BIOS, CPU, RAM, HDD போன்ற விடயங்களை உள்ளிணைத்திருப்பார்கள். ஆக ஒரு புதிய கணினியானது எவ்வாறிருக்குமோ, அவ்வாறே இந்த மென்பொருள் ஒரு போலியான தோற்றப்பாட்டினை தரும். இதன் மூலம் நாம் உண்மையாகவே ஒரு கணினியில் செய்து பரீட்சித்துப்பார்க்க வேண்டிய அனைத்துவிடயங்களையும் செய்யலாம். நமது நிஜ கணினிக்கு எவ்வித பிரச்சனையும் வராது. முக்கியமாக மென்பொருட்களின் பரீட்சார்த்த வேலைகளிற்கு இதனை பாவிக்கலாம். ஆனால் இப்போது பெரிய நிறுவனங்களே தமது நிர்வாக மென்பொருட்களை பல கிளைகளில் நிறுவிட இந்த மென்பொளைத்தான் பயன்படுத்துகிறார்கள். காரணம் நிறுவனங்களில் IT க்கென ஒவ்வாரு கிளைளிலும் பலரை பணியிலமர்த்தி அதிக சம்பளம் தருவதைவிட தனியாக ஒரு பொதுவான மேலாளரை வைத்துக்கொண்டு சாதாரண IT ஆரம்பநிலை பணியாளர்களைக்கொண்டே கிளைகளில் வேலைவாங்கிவிடலாம். நாமும் ஆரம்பத்தில் இந்த மென்பொருளைக்கொண்டே நிறுவி அனுபவப்பட்ட பின்னர் நிஜ கணினியில் Dual Boot ஆக நிறுவிப்பார்க்கலாம்.

1. சன் நிறுவனத்தாரின் இலவச மென்பொருளான Virtual Box எனும் மெனடபொருளை தரவிறக்கம் செய்து நிறுவிடுங்கள். உங்களிடம் VM Ware Workstation இருப்பின் அதுவும் சிறந்தது. ஆனால் இலவசமில்லை.

2. அம் மென்பொருளை திறந்ததும் கீழே உள்ளவாறு இருக்கும்.3. புதியதொரு வேர்சுவல் கணினியை உருவாக்க New எனும் பட்டனை அழுத்தவும். வரும் திரையில் Next என்பதை சொடுக்க நமது வேர்சுவல் கணினியில் நிறுவப்படப்போகும் இயக்கதளத்தைப்பற்றி அம் மென்பொருளிற்கு அறிவிக்கவேண்டும்.மேலேயுள்ள திரையில் நமது போலி கணினியின் பெயர் Fedora10 எனவும் நிறுவப்போகும் இயக்கதளத்தின் வகை Fedora எனவும் தந்துள்ளேன். அடுத்து Next இனை சொடுக்கவும்.

4. அடுத்து நமது போலி கணினியின் RAM இன் அளவினை தீர்மானிக்கவேண்டும். சாதாரணமாக 512 அல்லது 256 போதும். வேர்சுவல் கணினியில் நாம் வேறு மென்பொருட்களையும் நிறுவி பயன்படுத்தப்போகிறோமெனில் விரைவான செயற்பாட்டிற்கு அதிகளவான RAM தரலாம். இதனை எப்போதுவுண்டுமானாலும் நாம் மாற்றிக்கொள்ளலாம்.5. அடுத்து வன்தட்டு பற்றிய தகவல்களை தரவேண்டும். நாம் புதிதாக ஒரு போலி வன்தட்டை உருவாக்கப்போகிறோம்.அடுத்து dynamic Storage என்பதை தெரிவு செய்யவும். இது ஏனெனில் நீங்கள் 10GB என போலி வன்தட்டுக்கான இடத்தை தந்திருந்தால் அந்தளவு இடம் உண்மையில் உங்கள் உண்மையான வன்தட்டிலிருந்து பெறப்படப்போவதில்லை. நீங்கள் பாவிக்கும் அளவிற்கமைய கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டு போகும். அடுத்து Next.இவ்வன்தட்டை C Drive ல் வைக்காமல் வேறு partition ல் இடுவது நல்லது. அதற்கு Location எனுமிடத்தில் உள்ள போல்டர் ஐகானை சொடுக்கி எங்கு உங்கள் போலி வன்தட்டுக்கான கோப்பு இருக்கவேண்டுமென தெரிவு செய்யுங்கள். பின்னர் எவ்வளவு இடம் தேவையெனவும் தெரிவு செய்யுங்கள். இங்கு நான் 15GB தெரிவு செய்துள்ளேன். ஆனால் உண்மையில் அந்தளவு free space நமது வன்தட்டில் இருக்கவேண்டியதில்லை. உண்மையில் கிட்டத்தட்ட 5 GB அளவுமட்டுமிருந்தால் போதுமானது. அதற்குத்தான் முன்னர் Dynamic Storage என்பதை தெரிவு செய்திருந்தோம்.

6. சரி. இப்போது நாம் நமது போலி கணினியை உருவாக்கிவிட்டோம். நமது போலி கணினியின் உருவாக்கம்பற்றிய சாராம்சம் இப்படியாக திரையில் காண்பிக்கப்படும்.Finish என்பதை சொடுக்கி நாம் Virtual Box ன் முகப்புத்திரைக்கு செல்லலாம்.

7. இனி அம்முகப்புத்திரையில் நமது Fedora வினை நிறுவுவதற்கான நடைமுறைகளை செய்யப்போகிறோம். முதலில் எங்கிருந்து நிறுவுவது ? CD / DVD Drive இலிருந்துதானே ? அதனைத்தான் இப்போது தகவமைக்கப்போகிறோம்.முகப்புத்திரையில் CD/DVD Rom என்பதனை சொடுக்கவும். வரும் சாளரத்தில் Mount CD/DVD Rom என்பதனை டிக் பண்ணி அச்செயல்பாட்டை enable செய்யவும்.

இப்போது இரண்டு தெரிவுகளுண்டு. ஒன்று நமது கணினியிலிருக்கும் CD/DVD Drive இனையே நமது போலி கணினிக்கும் CD/DVD Rom ஆக வைப்பது. அல்லது ஒரு ISO Image கோப்பினை போலி CD/DVD Rom ஆக நமது போலி கணினிக்கு தகவமைப்பது.

உங்களிடம் CD இருந்தாலோ அல்லது தரவிறக்கிய CD இனை நீங்கள் இறுவட்டில் பதிந்துவிட்டீர்களெனில் முதலாம் தெரிவை தரலாம். அல்லது இரண்டாம் தெரிவை தரலாம். நாம் இங்கு இரண்டாம் தெரிவையே தொடரப்போகிறோம்.

ISO Image File என்பதன் அருகில் உள்ள கோல்டர் ஐகானை சொடுக்க வரும் சாளரத்தில் Add எனும் பட்டனை சொடுக்கி தரவிறக்கிய ISO கோப்பினை தெரிவு செய்யுங்கள்.

பின்னர் Next / Finish என தந்து மறுபடியும் முகப்புத்திரைக்கே வாருங்கள்.

7. இப்போது Start பட்டனை சொடுக்கி நமது போலி கணினியில் பெடோராவை இயக்க துவங்கவேண்டியதுதான்.

அடுத்த பதிவை பார்க்கவும்.

5 comments:

Subash April 13, 2009 at 11:10 PM

பெடோரா நிறுவுதல்

லினக்ஸ்

என கூகிளில் தேடிப்பாருங்கள். லினக்ஸ் பற்றி நிறைய தமிழ்ப்பதிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

Suresh April 14, 2009 at 1:17 AM

நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு
நானும் இரு பதிவு நகைச்சுவையாய் போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)

ராமதாஸின் அரசியல் யுக்தியும் அம்மாவின் புத்தியும்
http://sureshstories.blogspot.com/2009/04/ramadoss-and-amma-politics.html

காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html

Subash April 21, 2009 at 8:49 AM

வாங்க சுரேஷ்.
உங்க பதிவிற்கு வோட்டும்போட்டு பின்னுட்டமும் போ்டாச்சு( எப்பவோ!!!)

உங்க அரசியல் பதிவுதான் விளங்கவில்லை. :(

தொடர்ந்து வாருங்கள்

selvaraj April 21, 2009 at 10:17 PM

வணக்கம் சுபாஷ்..
விர்ச்வல் பாக்ஸ் ஐ எனது கணினியில் நிறுவ முடியவில்லை. விண்டொஸ் லோகோ டெஸ்ட் பாசாகவில்லை என்று சொல்கிறதே? மீறி இன்ஸ்டால் செய்யலாமா?

Subash April 25, 2009 at 4:08 AM

வருகைக்கு மிக்க நன்றி செல்வராஜ்.

உங்களின் விண்டோசிற்குரிய சரியான வேர்சனைத்தானே தெரிவு செய்திருக்கிறீர்கள் ?

அப்படியெனில் மீறி நிறுவலாம். வேர்சுவல் பாக்ஸ் நெட்வேர்க் ஆட்இன் களை நிறுவும்போதும் மீண்டும் அவ்வாறே குடுத்துவிடுங்கள்.